நவம்பர் 1 பள்ளிகள் திறப்பில் மாற்றம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 14-ம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது.
அதில், நவம்பர் 1 முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள்(LKG, UKG), அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்தது.
நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிப்பை அடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ‘முதலமைச்சருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்த கட்டாயம் பற்றியும், அவர்களை வரவழைப்பது குறித்தும் தான் விவாதித்தோம். ஆனால் ப்ளே ஸ்கூல், எல்.கே.ஜி., யூ.கே.ஜி, உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பதாக அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்றும் நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்து தெளிவான அறிக்கை ஒரிரு நாட்களில் வெளியடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
எனவே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தபடி பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (18-10-2021) வெளிவரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது.