1100ஐ அழைத்தால் குறைகளை கேட்கும் அரசு தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் சங்கம் பாராட்டு
பொதுமக்கள் குறைதீர்க்க திமுக அரசால் உருவாக்கப்பட்ட 1100 என்ற எண்ணிற்கு அழைத்தால் கோரிக்கைகள் கனிவாக கேட்கப்படுவதாக கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வெ.குமரேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கருணாநிதி கொண்டு வந்த உன்னதமான திட்டம் தான் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத் திட்டம் கணினி என்ற பாடம் இன்று அரசுப் பள்ளிகளில் ஒளிர்கிறது என்றால் இன்று ஒளிர்கின்ற சூரியன் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை தோற்றுவித்தார். இதோடு விட்டுவிடாமல் 2009 ஆம் ஆண்டு சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் கொண்டு வர வேண்டும் என்றும் அரசு பள்ளி மாணவர்களும் மென்பொருளில் மேன்மை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து 2011ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தையும் அதற்கான பாட புத்தகத்தை அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கும் நிலையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது.
சமச்சீர் கல்வியில் ஆறாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்த கருணாநிதி, அரசுப் பள்ளியில் கணினி என்ற வார்த்தை உச்சரிக்கப்படுவது என்றால் அது கலைஞர் ஒருவரால் மட்டுமே அவர் கொண்டு வந்த உன்னதமான திட்டம் என்பதாலோ அதற்கடுத்து வந்த ஆட்சியாளர்கள் கணினி அறிவியல் பாடத்தையும் அதேபோன்று அதற்காக அச்சடிக்கப்பட்ட ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கணினி அறிவியல் பாட புத்தகங்களையும் பாடத்தையும் குப்பை கழிவுகளை மாற்றி அழகு பார்த்தனர். இதனையும் பல்வேறு வருடங்கள் போராடி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் புறப்பட்டோம் கணினி அறிவியல் பாட புத்தகம் அனைத்தும் குப்பைகளாக மாற்றியது என்று. கலைஞர் கொண்டு வந்த கனவு திட்டத்தை அகற்றி மாணவர்களின் கனவு கல்வியான கணினி கல்வியை குப்பைக்கு வீசியது.
கணினி அறிவியல் பாடத்திட்டம் ஆறாம் வகுப்பு முதல் 2011 உருவாக்கிய தொடர்ந்து அண்டை மாநிலமான கேரளா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் இன்று இல் கட்டாய பாடமாக உள்ளது. குறிப்பாக கணினி கல்வியில் முதன்மை மாநிலமாக கேரளா மாநிலம் விளங்குகிறது என்றால் அதற்கு அடிகோலியது கலைஞரின் தலைமையிலான ஆட்சியில் சமச்சீர் கல்வியில் வெளியான கணினி பாட புத்தகம் என்றால் அது மிகையாகாது. இந்த பாடப்புத்தகத்தை பின்பற்றி 2017 ஆம் ஆண்டு கேரள அரசு ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை பத்தாம் வகுப்பு வரை ஆறாவது படமாகவும் கட்டாய பாடமாக அறிமுகப்படுத்தியது இதன் விளைவாக அரசு பள்ளியில் இன்று லட்சோப லட்சம் மாணவர்கள் சேர்க்கை கூடிக் கொண்டே இருக்கின்றது அதேபோன்று பொதுத்தேர்வு கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர் ஆனால் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்த நாம் ஆட்சி மாற்றத்தின் விளைவாக அரசுப்பள்ளிகளின் வாசல்களில் கூட நுழையவிடாமல் முந்தைய ஆட்சியாளர்கள் கணினி பாடத்திற்கு வஞ்சகம் செய்து விட்டனர் ஏனென்றால் இது கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதால்.. கணினி ஆசிரிய கோரிக்கை பொதுக் கோரிக்கையாக மாறி மாண்புமிகு முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்ட உள்ளது.
மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 1,100 என்ற எண்ணை பொதுமக்கள் குறை தீர்க்க உருவாக்கி அதை நல்ல முறையில் செயலாற்றி வருகின்றனர். இந்த எண்ணிற்கு செல்லும் அனைத்துப் புகார்களும் கனிவுடன் கேட்கப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்கின்றன கணினி ஆசிரியர்கள் நாங்கள் இதை பயன்படுத்தி கலைஞர் கொண்டு வந்த கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிக்கு கொண்டுவர வலியுறுத்தி இந்த எண்ணில் அனைவரும் கணினி படத்திற்காக குரல் கொடுத்தோம். இப்படியான கோரிக்கை சொல்லப்பட்டதால் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை பொதுவான கோரிக்கையாக மாற்றப்பட்டு மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் விரைவில் கொண்டு செல்லப்படும் என்று குழு அளிக்கும் உறுதியளித்துள்ளனர். கணினி ஆசிரியர்கள் அனைவரும் கழக ஆட்சிக்கு என்றும் ஆதரவளிப்போம் என்று இந்நேரத்தில் கூறிக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்..
திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.