பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் இல்லா தினவிழா ரத்து
கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரண மாக, பள்ளி மாணவர்களுக்கான, புத்தகம் இல்லாத தினம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சமக்ர சிக் ஷா என்ற அனைவருக்கும் கல்வி திட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளும், பணிகளும் செயல்படுத்தப் படுகின்றன.இதன் ஒரு கட்டமாக, பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் தனித் திறன்களை மேம்படுத்தவும், பள்ளிக்கு வருவதை உற்சாகப்படுத்தவும், புத்தகமில்லா தினம் கொண்டாடப்படுகிறது.
இதன்படி வரும், 26ம் தேதி, புத்தகமில்லாத தினத்துக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் அறிவுறுத்தியது.இந்நிலையில், கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, மாணவர்கள் ஒன்றாக கூடும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை. எனவே, பள்ளி கல்வித்துறை அறிவித்த புத்தகமில்லா தின நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.