Googleல் இந்த 3 விஷயங்களைத் தேடினால் நிச்சயம் சிறை தண்டனை!

எல்லாருடைய வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் இணையம் ஒரு அங்கமாகிவிட்டது. யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றைக் கேட்க அல்லது கற்றுக்கொள்ள விரும்பினால் உடனடியாக இணையத்தின் தேடுபொறியான கூகுளில் தேடுவார். இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் அனைத்தும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
தேடுபொரியான கூகுளில் சில தகவல்களைம் தேடுவது மோசமான ஆபத்தை விளைவிக்கும். அதாவது சிறைக்கு செல்லும் சூழ்நிலையையும் இது ஏற்படலாம். ஆதலால் கூகுளில் சிலவற்ரற தேடுவதைத் தவிர்க்கவேண்டும்
வெடிகுண்டு தயாரிக்கும் தகவலைத் தேடுவது: பாதுகாப்பு அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருவதால் வெடிகுண்டு தயாரிக்கும் தகவலைத் தேடுவது சட்டப்படி குற்றமாகும். யாராவது ஒருவர் கூகுளில் இது பற்றித் தேடினால் பாதுகாப்பு ஏஜென்சிகளின் ரேடாரில் உங்கள் கணினிக்கு சென்று விடும். அத்தகைய சூழ்நிலையில் உங்களை தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்துவர். தேவைப்படும் பட்சத்தில் உங்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதால் வெடிகுண்டு தயாரிக்கும் தகவல் தேட வேண்டாம்.
குழந்தைகளின் ஆபாசப் படங்கள்: ஆபாச தளங்களைப் பார்ப்பதே தவறு. அதிலும் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை ஒருபோதும் தேடக்கூடாது. ஏனெனில், இந்தியாவில் இது தொடர்பாக POCSO சட்டம் 2012, 14-ன் கீழ், குழந்தைகளின் ஆபாசத்தைப் பார்ப்பது, உருவாக்குவது மற்றும் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த விஷயத்தில் அரசு உங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க அதிக அளவில் வாய்ப்புகள் உண்டு. இந்த குற்றத்திற்கு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்பதால் பொதுவாக ஆபாச தளங்களைப் பார்ப்பதை தவிர்த்துவிடுவது நவ்லது.
கருக்கலைப்பு: கூகுளில் தேடக் கூடாத மூன்றாவது விஷயம் கருக்கலைப்பு பற்றியது. கருக்கலைப்பு என்று கூகுளில் தேடுவது சட்டப்படி குற்றமாகும். ஏனென்றால், இந்தியாவில் முறையான மருத்துவரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்வது என்பது சட்ட விரோதமானது ஆகும்.
மேற்கூறிய மூன்று விஷயங்களுமே இந்தியாவில் சட்ட விரோதமாகக் கருதப்படுவதால், அதை கூகுளில் தேடுவது உங்களை சிறை தண்டனைக்கு உள்ளாக்கும் என்பதால் கவனமாக இருப்பது நன்மை பயக்கும்