இன்றைய சூழலில் மதிப்புக் கல்வி அவசியம்
குழந்தைகளை நல்ல குடிமக்களாக மாற்ற மதிப்புக் கல்வியை தொடக்கத்தில் இருந்தே கற்பிக்க வேண்டும் என்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, &'பெற்றோர்களும் போட்டியைக் கருத்தில் கொண்டு, தங்கள் குழந்தைகளின் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பாடத்திட்டத்தை படிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
நமது பாடத்திட்டத்தில் Value Education அதாவது மதிப்புக் கல்வி சேர்க்கப்பட வேண்டும். தொடக்கத்தில் இருந்தே மதிப்புக் கல்வி கற்பிக்கப்பட்டால்தான், நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். &அறம் சார்ந்த நெறிமுறை பண்புகள் குறித்த ஆய்வு இல்லாததால் சமூகத்தில் தேவையற்ற சம்பவங்கள் நடக்கின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, &'வாசிப்புப் பழக்கம் சுய அபிவிருத்திக்கான மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று. இது வாழ்நாள் முழுவதும் சிறப்பாக சேவை செய்யும் திறன்’ என்றும் கூறினார்.