EMIS தளத்தில் ஓவிய பாடவேளை ஒதுக்கப்படவில்லை அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி
EMIS இணைய தளத்தில், பள்ளிக்கான பாடவேளை குறிப்பில் கூட, ஓவியப்பாடம் இடம் பெறாததால், அரசு பள்ளி ஆசிரியர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட கலைப்பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு வகுப்புக்கும், வாரத்துக்கு ஒரு பாடவேளை ஒதுக்கப்படும்
நடப்பு கல்வியாண்டில், வகுப்பு வாரியாக பாடவேளை உருவாக்கப்பட்டு, பள்ளி கல்வி மேலாண்மை முறைமை (EMIS)இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. இதில், ஓவியத்துக்கு பிரத்யேக பாடவேளை ஒதுக்கவில்லை. ஆனால், நன்னெறி கல்விக்கு பதிலாக, ஓவிய வகுப்பு கையாள, வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
தமிழ்நாடு கலையாசிரியர் நலச்சங்க மாநில தலைவர் திரு ராஜ்குமார் கூறுகையில்,''அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்தெடுக்க, கலைப்பாடங்கள் கொண்டுவரப்பட்டன. நிரந்தர ஆசிரியர்கள் மட்டுமின்றி, பகுதிநேர ஆசிரியர்களும் நியமித்து, பாடவேளை ஒதுக்கப்படுகிறது
மற்ற கலைப்பாடத்தை போல், ஓவியத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், பாடவேளையே ஒதுக்காமல் இருப்பது, கலைப்பாடங்கள் மீதான கல்வித்துறையின் அலட்சிப்போக்கை காட்டுகிறது. புதிதாக 'பாடதிட்டம் உருவாக்க, பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், பாடத்திட்ட குழு அமைக்காமல் இருப்பது, அதிருப்தியை ஏற்படுத்துகிறது,''