இடைக்கால பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்
மத்திய பட்ஜெட் - 2024 இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2024 மக்களவைத் தேர்தல் நிறைவடைந்து புதிய அரசு அமைந்தவுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இன்று மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அனைத்து துறைகள் சார்ந்த அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் 10 முக்கிய அறிவிப்புகளை அலசுவோம்.
வருமான வரி தொடர்பான அறிவிப்புக்கு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் வருமான வரி விகிதத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும், பழைய நடைமுறையே தொடரும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அடைந்து உள்ள வளர்ச்சி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார்.
மாலத்தீவு அரசு இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்து இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்து இருக்கும் நிலையில் மாலத்தீவுக்கு போட்டியாக அரபிக் கடலில் உள்ள லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் தரப்படும் என கூறி இருக்கிறார்.
மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ1.2 லட்சம் கோடி மத்திய அரசால் வழங்கப்படும் என நிதியமைச்சர் உறுதி
ரயில்வே துறையில் 40,000 சாதாரண ரயில் பெட்டிகளை வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தி புதுப்பிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 6. நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக்குழு அமைக்கப்படும் என தெரிவித்த நிர்மலா சீதாராமன் ஏற்கனவே இருக்கும் மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் புதிதாக அமைக்கப்படும் என்றார்.
ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும்" என அவர் கூறினார். 8. இந்தியா முழுவதும் மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்வதற்கு தேவையான பேட்டரி சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தப்படும். 9. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில கிராமப் புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என நிதியமைச்சர் உறுதி. 10. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள் என அவர் தெரிவித்து உள்ளார்.