தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் கட்-ஆஃப் எவ்வளவு? டாப் மருத்துவ கல்லூரிகள் எவை?
தேசிய தேர்வு முகமை (NTA) விரைவில் நீட் தேர்வு 2021 முடிவை அறிவிக்க உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். அதன் பிறகு இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கும். அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 சதவீத இடங்களுக்கான கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழு (MCC) மூலம் நடத்தப்படும். அதேசமயம், மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அளவிலான கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.
தமிழகத்தில், மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME) மாநில கவுன்சிலிங்கை நடத்துகிறது. மாநில கவுன்சிலிங்கில், நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களில் கட்-ஆஃப்-ஐ விட அதிக மதிப்பெண்கள் பெற்று தகுதியை பூர்த்தி செய்யும் நபர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். கட் ஆஃப் என்பது அடிப்படையில் சேர்க்கை கிடைக்கப்பெறும் கடைசி ரேங்க் ஆகும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு கல்லூரியிலும், அது மாறுபடும்.
விண்ணப்பதாரர்கள் முந்தைய ஆண்டு நீட் தேர்வை சரிபார்த்து கட்-ஆஃப் எவ்வளவு என்பது பற்றி யோசனை பெறலாம். கடந்த காலங்களில், தமிழகத்தின் முதல்நிலைக் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் பின்வருமாறு.
மருத்துவக் கல்லூரி | பொதுப்பிரிவு கட்-ஆஃப் |
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (நிறுவன ஒதுக்கீடு) | 2080 |
கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, வேலூர் (பொது) | 213 |
சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை, சென்னை | 93 |
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் | 2539 |
PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் | 1683 |
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் | 3718 |
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி | 300+ |
கோவை மருத்துவக் கல்லூரி, கோவை | 480 |
இந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருவள்ளூர் | 2592 |
அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் | 798 |
தமிழ்நாட்டின் முன்னணி மருத்துவக் கல்லூரிகள்:
சமீபத்தில், கல்வி அமைச்சகம் NIRF 2021 தரவரிசையை வெளியிட்டது. மொத்தத்தில், 50 கல்லூரிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன, அவற்றில் 10 கல்லூரிகள் தமிழ்நாட்டின் கல்லூரிகளாகும்.
NIRF ரேங்க் 3 – கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி
NIRF ரேங்க் 6 – அமிர்தா விஷ்வா வித்யாபீடம்
NIRF ரேங்க் 14 – ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
NIRF ரேங்க் 16 -சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை, சென்னை
NIRF ரேங்க் 20 – எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
NIRF ரேங்க் 27 – சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம்
NIRF ரேங்க் 33 – PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
NIRF ரேங்க் 40 – அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
NIRF ரேங்க் 48 – திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி
NIRF ரேங்க் 49 – செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
இந்த கல்லூரிகள் அனைத்தும் அகில இந்திய ஒதுக்கீட்டு கவுன்சிலிங்கில் 15 சதவிகிதம் மற்றும் 85 சதவீத மாநில கவுன்சிலிங்கில் பங்கேற்கின்றன. தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கில், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 8,000 எம்பிபிஎஸ் மற்றும் 2,873 பிடிஎஸ் இடங்களுக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது.
இந்த கவுன்சிலிங்கில், தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மற்ற மாநிலங்களின் விண்ணப்பதாரர்கள் பொதுப் பிரிவின் (15% இடங்கள்) கீழ் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இது தவிர, விண்ணப்பதாரர்கள் NEET 2021 இல் தகுதி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 12 ஆம் வகுப்பில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச வயது 17 ஆண்டுகள். இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் தகுதிகள் தெளிவுபடுத்தப்படும்.
tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில், கவுன்சிலிங் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் படிப்பு மற்றும் கல்லூரிகளுக்கான தங்கள் விருப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். நீட் மதிப்பெண், கல்லூரி மற்றும் படிப்பு தேர்வுகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர் DME ஒரு இட ஒதுக்கீடு பட்டியலை வெளியிடும். மேலும் சேர்க்கை நடைமுறைகளை பூர்த்தி செய்வதன் மூலம் ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் இடங்களை உறுதி செய்யலாம்.