பொறியியல் ,மருத்துவம் படிப்புகள் போல அரசு கலைக்கல்லூரிகளிலும் இணைய வழி மாணவர் சேர்க்கை - உயர் கல்வித் தறை முடிவு
சென்னை: தனியார் கல்லுாரிகளை போல, அரசு கலை கல்லுாரிகளிலும், ஆன்லைன் முறையில், மாணவர் சேர்க்கையை நடத்த, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள், சுயநிதி பல்கலைகள் போன்றவற்றில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழக உயர்கல்வி துறையின் சார்பில், கவுன்சிலிங் நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் கலை கல்லுாரிகளிலும், ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இதேபோல, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், ஆன்லைன் முறையில், மாணவர் சேர்க்கையை நடத்த, உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.முதற்கட்டமாக, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகளில், ஆன்லைனில் விண்ணப்ப பதிவை அறிமுகம் செய்ய, உயர் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.