மூன்று மாதங்கள் ஜாக்கிரதை
பண்டிகை காலம் துவங்கியுள்ளதை அடுத்து கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அக்டோபர், நவம்பர், மற்றும் டிசம்பரில் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளை மக்கள் தவிர்க்கும்படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை குறைந்தாலும், தினமும் 20 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக இணை செயலர் லவ் அகர்வால் கூறியதாவது நடப்பு அக்டோபர் மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பண்டிகைகள், திருமண விழாக்கள் ஆகியவை அதிக அளவில் நடக்க உள்ளது. அவற்றில் கலந்து கொள்ள மக்கள் அதிகம் கூடுவர்.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதை கருதி, அதிகம் கூடும் கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். பொருட்களை 'ஆன்லைன்' வாயிலாக வாங்கவும். தவிர்க்க இயலாத பட்சத்தில் வெளியே சென்றால்,முக கவசம், சமூக இடைவெளி ஆகிய கொரோனா விதிமுறைகளை பின்பற்றவும்.