தரையில் அமர்ந்து பாடம் கேட்ட முதல்வர்!!!
தமிழகக்தில் இல்லம் தேடி கல்வி என்ற மகத்தான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இன்று தொடங்கி வைத்தார். கொரோனா காலகட்டத்தால் 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தன்னாராளர்கள் மூலம் இல்லம் தேடி கல்வி திட்டம் செய்லபடுத்தப்பட உள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டம் அதாவது தன்னார்வலர்கள் 6 மாதகாலம் தினமும் ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் சொல்லி கொடுப்பார்கள். இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், கொரோனா காலத்தில் மாணவர்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்ய பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் அடிப்படையில்தான் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கல்வியில், தமிழகம் முன்னோடி என்ற நிலையில், இந்த திட்டம் மேலும் சிறப்பு சேர்க்கும். இந்த திட்டம், லட்சக்கணக்கான மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றும். இந்த திட்டம் குறித்து யாரும் எந்த ஐயமும் வேண்டாம்' என்று ஸ்டாலின் கூறினார்.
இதனை தொடர்ந்து அருகில் உள்ள பள்ளியில் 'இல்லம் தேடி கல்வி' தொடக்க விழாவில் ஆசிரியர் ஒருவர் மாணவ-மாணவிகளுக்கு பாடம் சொல்லி கொடுத்தார். அப்போது சற்றும் யோசிக்காமல் தரையில் அமர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து ஆசிரியர் பாடம் சொல்லி கொடுப்பதை கவனித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அங்கு நின்று கொண்டிருந்தார். இதேபோல் சக ஆசிரியர்களும் நின்று கொண்டிருந்தனர்.
மற்றவர்கள் நிற்க ஒரு முதல்வர் என்றும் நினைக்காமல் எளிய முறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தரையில் அமர்ந்திருப்பது கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இவர்தான் மக்களின் முதல்வர். முதல்வர் என்ற பந்தா இல்லாமல் எளிமையாக இருக்கிறார் என்று நெட்டிசன்கள் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர்.