பள்ளிகளில் நவம்பர் வரை சேர்க்கை நடத்த அனுமதி
தமிழகம் முழுதும் அரசு பள்ளிகளில், நவம்பர் வரை மாணவர் சேர்க்கையை நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.வரும் 1ம் தேதி முதல் அனைத்து வித பள்ளிகள்மற்றும் அங்கன்வாடிகளை முழுமையாக திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, LKG - UKG, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, வரும் 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிகள் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாமலும், பாதியில் படிப்பை விட்டு விட்டும் தவிக்கும் மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர விரும்பினால், அவர்களை சேர்த்து கொள்ளலாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கொரோனா தொற்று குறைவால், மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதால், நவம்பர் வரையிலும், மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.