பள்ளியில் இருந்து மாணவிகளை வெளியே அழைத்து செல்ல நேர்ந்தால், தலைமையாசிரியர் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்
பள்ளி மாணவிகளை வெளியில் அழைத்துச் செல்ல நேர்ந்தால், பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற்று, ஒரு ஆசிரியை உடன் செல்ல வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில், மாணவ – மாணவியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க, மாணவர் மனசு என்ற புகார் பெட்டி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவ – மாணவியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை, 14417, 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பாதுகாப்புக்காக, எஸ்.எஸ்.ஏ.சி., என்ற மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது என்றும்,
இந்த குழுவினர், போக்சோ சட்டம் குறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வாயிலாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க ஆணையிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவிகளை வெளியில் அழைத்துச் செல்ல நேர்ந்தால், பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற்று, ஒரு ஆசிரியை உடன் செல்ல வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.