பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தினமும் நேரடி வகுப்புக்கு வர அறிவுருத்தல்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி :பத்தாம் வகுப்பு , 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வழக்கம் போல மார்ச், ஏப்ரலில் நடத்தப்படும். வினாத்தாளில் எந்த மாற்றமும் இல்லை. பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மற்ற மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்தால், சுழற்சி முறை கைவிடப்படும். பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளுக்கான அவசர உதவி எண்கள், 1098 மற்றும் 14417 ஆகியவற்றை எழுதி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக, மாணவர் விபரம் சேகரித்தல், தேர்வு மையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, மாநிலம் முழுதும் 60 கணினி ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கி, அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.