CBSE 10ம் வகுப்பு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்
CBSE 10ம் வகுப்பு முதல் பருவ தேர்வுக்கான தேதி, நாளை மறுநாள்(18-10-2021) வெளியிடப்பட உள்ளது.கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
அதன்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, CBSE பள்ளிகளின் நடைமுறைகள் மற்றும் தேர்வுகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.இதன்படி, CBSE பாடத்திட்டத்தில் படிக்கும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு பொதுத் தேர்வுக்கு பதில், இரண்டு பருவத் தேர்வுகள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் படி, இந்த பருவத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. 12ம் வகுப்புக்கு, 114 பாடங்களுக்கும், 10ம் வகுப்பபுக்கு 75 பாடங்களுக்கும் பருவத் தேர்வு முறை அமலாகிறது. முக்கிய பாடங்கள் மற்றும் விருப்ப பாடங்கள் என இரண்டு பிரிவு பாடங்களுக்கு, தேர்வு அட்டவணைகள் தனித்தனியாக வெளியிடப்பட உள்ளது.
முதல் பருவத் தேர்வுக்கான அட்டவணையை, நாளை மறுநாள் (18-10-2021) CBSE வெளியிட உள்ளது. நவம்பர், டிசம்பரில் தேர்வு நடத்தப்பட உள்ளது. மொத்தம் ஒன்றரை மணி நேரத்துக்கு, OBJECTIVE என்ற கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படுகிறது. பின், அடுத்தாண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் இரண்டாம் பருவத் தேர்வு நடத்தப்படும். அதன்பின், இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து முடிவுகள் அறிவிக்கப்படும்.