அனைத்து பள்ளிகளிலும் இனி நூலக பாட வேளை அவசியம்
அனைத்து பள்ளிகளிலும், வாரம் ஒரு முறை நுாலக பாட வேளைகளை அவசியம் நடத்த வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. தனி அறைபல பள்ளிகளில் நுாலகங்களின் பயன், மாணவர்களுக்கு கிடைக்காமல் உள்ளது. நுாலக பாட வேளைகள் முறையாக நடத்தப்படுவதில்லை.எனவே, ஒவ்வொரு பள்ளியும் வாரம் ஒரு முறை, நுாலக பாட வேளைகள் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். நுாலகத்துக்கு தனி அறை ஒதுக்க வேண்டும். நுாலக பாட வேளைகளில், மாணவர்கள் புத்தகங்களை படிப்பதுடன், வீட்டிற்கு எடுத்துச் சென்று, படிக்கவும் அனுமதிக்க வேண்டும். இதற்கான பதிவேடை பராமரிக்க வேண்டும்.மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகத்தை படித்ததும், அவர்களுக்கு கட்டுரை, கதை, நுால் அறிமுகம் செய்தல் போன்ற போட்டிகள் நடத்த வேண்டும்.
விருப்பம் உள்ள மாணவர்களை தேர்வு செய்து, வாசகர் வட்டம் உருவாக்க வேண்டும். அருகில் உள்ள நுாலகங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.ஆலோசனைகள்புத்தக நன்கொடையாளர்களை அதிகரிக்க வேண்டும். தேவையான புத்தகங்கள் இல்லாவிட்டால், அருகில் உள்ள மாவட்ட மைய நுாலகம் மற்றும் பிற நுாலகங்களை அணுகி, மாணவர் வாசிப்புக்கு ஏற்ற புத்தகங்களை பெற்று பயன்படுத்தலாம்.நுாலகங்களில் நாளிதழ்களை படிக்கவும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.