பெண்களின் மனநிலையே அவர்களை அடிமையாக்குகிறது! அதை உடைத்தெரிவதெப்படி?
முப்பத்தியாரு வயதினிலே" என்ற படத்தில் ஜோதிகா தன் மகளிடம் சொல்லும் ஒரு வசனம்
உனக்காக நான் என்னல்லாம் தியாகம் செஞ்சிருக்கேன்னு தெரியுமா?
அதுக்கு அந்த பெண் உன்னை யார் செய்ய சொன்னா. நான் உன்கிட்ட கேட்டனா. நீ வாழ்க்கையில சாதிக்காததுக்கு என்னை ஒரு காரணம் காட்டாதன்னு சொல்லுவாள்.
பெண்களோட அடிமை தனம் திருமணத்துக்கு பிறகு ஆரம்பிக்கிறது. அதை அவர்கள் விரும்பியே செய்கின்றனர். கல்யாணத்துக்கு அப்பறம் நான் வேலைக்கு போக போறதில்லை. என் குடும்பத்தை பாத்துக்குறது தான் எனக்கு முக்கியம்ன்னு சொல்லுவாங்க.
சின்ன சின்ன விஷயத்துக்கு கூட அட்ஜெஸ் பண்ணிப்பாங்க. இப்படி மற்றவர்களுக்காக வாழ்ந்துட்டு அவங்களுக்கான வாழ்க்கையை அதிலே தேடுனா ஒன்னுமிருக்காது.
ஒரு கட்டத்திலே அந்த குடும்பமே அவர்களை ஏளனம் செய்யும் போது தான் தெரியும் தன்னுடைய தியாகத்துக்கு மதிப்பில்லைன்னு. அந்த தியாகத்துக்கு இன்னொரு பெயர் அடிமைத்தனம்.
அப்படி குடும்பத்துக்காக உழைக்குற பெண்கள் தன் கணவனிடம் பணம் வேணும்னு போய் நிக்கும் போதோ இல்லை நீ என்ன வீட்டுல சும்மா தானாயிருக்கன்னு கேட்க்கும் போது தான் அந்த அடிமை தனத்தோட உண்மை முகம் வெளிப்படும்.
பெண்கள் ஒரு மனைவியாகவோ இல்லை தாயாவோ ஆகறாங்கங்குறதுக்காக அவங்களுடைய வாழ்க்கையை தூக்கிப்போட்டுடணும்னு ஏதாவது இருக்கா?
அதுக்கு தான் கையில எப்பவுமே பிளான் பி இருக்கணும். உங்களுக்கான வாழ்க்கை. உங்கள் தனித்துவத்தை மற்றவங்களுக்கு காட்டும் வாழ்க்கை. அப்படி நீங்க வாழுறதுல எந்த தப்புமேயில்லை.
கல்யாணம் ஆயிடுச்சி. கணவர், குழந்தைன்னு ஆயிடுச்சி. இனி நமக்காக வாழ்ந்து என்ன பண்ண போறோம். குடும்பத்துக்காக வாழுவோம்னு பெண் நினைக்குறாயில்லையா அது தான் அவள் அடிமை தனத்தின் ஆரம்ப புள்ளி. உங்களுக்காக நீங்க வாழலாம். அதுக்கு காரணம் தேவையில்லை.
நான் ஒரு மனைவி, அம்மான்னு பெருமையா சொல்வதை தவிர்த்து. இது தான் நான்னு ஒரு பெண் தன்னை அடையாள படுத்திக்குறதுல தான் அவளுடைய இந்த அடிமை தன்மை ஒழியும். அது அவளுக்கு மதிப்பையும் தேடித்தரும்.