ஆசிரியர்களுக்கும் 'Zero' கலந்தாய்வு முதுகலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (DEOகள்) போல் BEOக்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 'Zero' காலிப்பணியிடங்களாக அறிவித்து, நவம்பர் 1க்குள் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
அச்சங்க மாநில தலைவர் இளங்கோவன் கூறியதாவது: கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர்க அனைத்து பணியிடங்களும் காலியாக அறிவிக்கப் பட்ட 'ஜீரோ கலந்தாய்வு' அக்டோபர் 12ல் நடத்தப்படவுள்ளது. இது பல்வேறு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நேர்மை , வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்துள்ளது.
இதுபோல் வட்டார கல்வி அலுவலர்கள் (BEOக்கள்), தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை , சிறப்பாசிரியர்களுக்கும் 'ஜீரோ கலந்தாய்வு' நடத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.