+ 2 துணை தேர்வு அக்டோபர் 1 முதல் விடைத்தாள்
அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 துணை தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், வரும் 1ம் தேதி காலை 11:00 மணி முதல் 5ம் தேதி வரையில், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற, தேர்வு துறையின் இணையதளத்தில், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
அதன்பின், விடைத்தாள் நகலை ஆய்வு செய்து, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு ஆகியவற்றில், எது தேவை என முடிவு செய்து, தேர்வு துறை இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அதை இரண்டு நகல்கள் எடுத்து அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதிக்குள், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அதற்கான கட்டணத்தை, முதன்மை கல்வி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் மறுமதிப்பீடுக்கு 505 ரூபாயும், மறுகூட்டலுக்கு ஒரு பாடத்துக்கு 205 ரூபாயும், உயிரியல் பாடத்துக்கு 305 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.