நீட் தேர்வு விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது
நீட்' தேர்வுக்கான விடை குறிப்புகளும், மாணவர்களின் விடைத்தாள்களும் வெளியிடப்பட்டுள்ளன.
'நீட்' தேர்வுக்கான முடிவுகள் தயாராகி உள்ளன. அதற்கு முன் தேர்வுக்கான விடை குறிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன.மாணவர்கள் தேர்வு எழுதிய, ஓ.எம்.ஆர்., விடைத்தாளும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் இ- - மெயில் முகவரிக்கு விடைத்தாள் நகல் அனுப்பப்பட்டு உள்ளதாக, தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
மாணவர்கள் தங்கள் விடைத்தாளை பார்த்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள விடைக் குறிப்புகளுடன் ஒப்பிட்டு, மதிப்பெண்ணை கணக்கிடலாம். இதன் வழியே, மாணவர்கள் தங்களுக்கான விடைகளையும், மதிப்பெண்ணையும் உத்தேசமாக தெரிந்து கொள்ளலாம். விடைக்குறிப்புகளில் கடைசி நேரத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, இந்த மதிப்பெண் மாறும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், விடைக்குறிப்பில் தவறுகள் இருந்தால், அதுதொடர்பாக உரிய ஆதாரங்களுடன், நாளை காலை, 10:00 மணிக்குள், https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது