8ம் வகுப்பு தனித்தேர்வு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுத விண்ணப்பித்தோருக்கு, இன்று தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியிடப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: எட்டாம் வகுப்பு தனித்தேர்வு வரும், 8ம் தேதி முதல் நடக்க உள்ளது. இந்த தேர்வை எழுத விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.
தேர்வர்கள் இன்று பிற்பகல் 2:00 மணி முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இன்றி தேர்வு மையம் வருவோர், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.