அறிவு முக்கியமல்ல. ஆற்றல்தான் முக்கியம்!

திறமைகளை ஒருங்கிணைக்க ஒரு ஆற்றல் உள்ளவரையே மக்கள் தலைவராக ஏற்றுக்கொள்வர். அதனால் ஒரு தலைவனுக்கோ, தொழிலதிபருக்கோ அறிவாற்றல் கொஞ்சம் இருந்தால். போமும். இந்தியாவின் டாடா நிறுவனம் தயாரிக்காத பொருட்களே கிடையாது. ஒருநாள் அந்த நிறுவனம் உற்பத்தியை நிறுத்தினால் கூட பலகோடி நஷ்டம் ஏற்படும். அந்த அளவுக்கு பொருளாதார. சந்தையை நிர்ணயிக்கும் சக்தி டாடாவிடம் இருந்தது.
சாதாரண குண்டூசி முதல் மிகப் பெரியயந்திரம் வரை தயாரிக்கும் உரிமையாளர் டாடாவுக்கு அவர் தயாரிக்கும் பொருட்களின் ஞானமோ, அனுபவமோ எதுவும் கிடையாது. ஆனால் அத்தனை பணிகளையும் சிறப்பாக செய்தார் என்றால் அந்தந்தத் துறையில் திறமை சாலிகளை பணியில் அமர்ந்திருந்ததுதான் காரணம்.
கார் தயாரிப்பதில் சக்ரவர்த்தியான ஃபோர்டு ஒரு முறை நீதிமன்றத்தில் ஒரு பத்திரிகை மீது வழக்கு தொடுத்தார். பத்திரிகை ஃபோர்டு ஒரு முட்டாள் என செய்தி வெளியிட்டிருந்தது. பத்திரிகை சார்பாக ஃபோர்டு ஒரு முட்டாள் என நிரூபிக்கப் பல கேள்விகள் கேட்கப்பட்டன.
அனைத்திற்கும் தெரியாது என்ற பதிலையே அவர் அளித்தார். என்றார். உடனே பத்திரிகையாளர் இப்படி ஒன்றும் தெரியாத ஒருவரைத்தான் நாங்கள் முட்டாள் எனக் குறிப்பிட்டோம் என்றார்.
அதன்பின் ஃபோர்டு பேசினார் "இந்த முட்டாள்தனமான கேள்விகளுக்கு நான் பதில் சொல்லமுடியாது. எனக்கு எந்த துறையில் அனுபவம் உள்ளதோ அதில்தான் நான் சிறந்தவனாக இருக்க முடியும்.
ஒரு காரை எந்த வடிவத்தில் செய்தால் மக்கள் விரும்புவார்கள். எவ்வளவு வேகத்தில் செல்லும் என்பதை அறிந்துள்ளேன். நான் தயாரிப்பதில் எங்கு விற்பனை செய்வேன் என்ற தகவல்கள் நான் அறிந்து வைத்துள்ளவை. இவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் என் அறையிலிருந்து ஒரு பட்டனைத் தட்டினால் என் கீழ்ப்பணியாற்றுபவர்கள் சொல்லி விடுவார்கள். அவர்கள் இவர்களைவிட திறமைசாலிகள். எனக்கு எந்த துறைசார்ந்த தகவல் வேண்டுமோ அதனை சரியாகத்தரும் ஆற்றல் உள்ளவர்களை எனக்குக் கீழ் பணியில் அமர்த்தியுள்ளேன்" என்றார்.
ஃபோர்டின் பேச்சைக் கேட்ட நீதிபதி பத்திரிகை நிறுவனத்தைச் பார்த்து இவரைப் பார்த்தால் முட்டாளாக தெரியவில்லை. மிகச் சிறந்த அறிவாளியாகத் தெரிகிறார். அதனால் முட்டாள் என்று எழுதியதற்கு ஃபோர்டிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லி ஆணையிட்டார். ஃபோர்டின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்வது அறிவு முக்கியமல்ல. அறிவுடையவர்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல்தான் முக்கியம்.