365 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி
கருணை அடிப்படையில், 365 பேருக்கு பணி நியமன ஆணைகளை, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் 28; நுகர்பொருள் வாணிப கழகத்தில் 34; மின்வாரியத்தில் 49 பேர் உட்பட பணியின் போது இறந்த 365 பேரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்டையில் அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றால் இறந்தோரின் வாரிசுகளும் அடக்கம்.இதற்கான பணி ஆணை வழங்குவதன் அடையாளமாக, 18 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முத்து சாமி, அன்பரசன், சக்கரபாணி, செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.ஸ்கார்பியோ கார்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்களுக்கு, 98.91 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ள ஒன்பதுஸ்கார்பியோ கார்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதில், அமைச்சர் பெரியகருப்பன், ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலர் கோபால் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்