கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், டிசம்பர்மாதத்தில் செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தப்படும்
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த கல்வி ஆண்டில், பள்ளிகளில் அனைத்து வகை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கல்லுாரிகள் மற்றும் பல்கலை மாணவர்களுக்கு, வீட்டில் இருந்தே தேர்வு எழுதி, விடைத்தாளை ஆன்லைன் வழியில், கல்லுாரிகளுக்கு அனுப்பும் நடைமுறை அமலானது.
இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால், பணி நியமன போட்டி தேர்வுகள், உயர்கல்வி நுழைவு தேர்வுகள் போன்றவை நேரடியாக நடத்தப்படுகின்றன.அதை பின்பற்றி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், வரும் காலங்களில் மீண்டும் செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்த, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
எனவே, டிசம்பர் மாதம் நடக்கும் செமஸ்டர் தேர்வுகள், நேரடியாக மாணவர்கள் கல்லுாரிகளில் அமர்ந்து எழுதும் வகையில் நடத்தப்பட உள்ளன.இதுதொடர்பாக, சென்னை பல்கலை சார்பில், இணைப்பு கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை, மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன், கோவை பாரதியார் உள்ளிட்ட அனைத்து பல்கலைகளும், நேரடி செமஸ்டர் தேர்வுகளையே நடத்த உள்ளன.