சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகங்களில் 'இ - சேவை' மையம் துவக்கம்
அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்கள் அலுவலகங்களிலும் 'இ - சேவை' மையங்களை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அரசு இ - சேவை மையங்கள் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் இருப்பிடம் அருகிலேயே வழங்குகின்றன.
இதை மேம்படுத்தும் வகையில் அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகங்களிலும் 'இ - சேவை' மையங்களை துவக்கி, மக்கள் இணையவழி சேவைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன. சட்டசபை செயலகத் துறை சார்பாக அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகங்களிலும் இ -சேவை மையங்கள் அமைப்பதற்காக, நவீன மேஜை கணினிகள் வழங்கப்பட உள்ளன. இக்கணினிகளை பயன்படுத்தி, tnesevai.tn.gov.in/Default.aspx என்ற இ - சேவை இணையதளத்தில் இருந்து, இணைய வழி சேவைகளை, மக்களுக்கு வழங்க, 234 எம்.எல்.ஏ.,க்களுக்கும், பயனர் எண் மற்றும் கடவுச்சொல் அளிக்கப்பட்டுள்ளன.