முதுநிலை ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுனர் நிலை - 1 ஆகிய பதவிகளில், காலியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆன்லைன் வழி விண்ணப்பங்கள், செப்டம்பர் 9 முதல் பெறப்படுகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் தொடர் மழை பெய்வதன் காரணமாக, விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவு செய்வதில் சிரமங்கள் உள்ளன. இதை கருத்தில் வைத்து, நேற்று முடிய வேண்டிய விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், நவம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.