அரசு பள்ளிகளில் வினாடி வினா நடத்த அறிவுறுத்தல்
அரசு பள்ளிகளில் வினாடி வினா வகை தேர்வுகளை நடத்த, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல்,12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நேரடியாக மாணவர்கள் வரவழைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. மற்ற மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், பொது தேர்வு எழுத, அரசு பள்ளி மாணவர்களை தயார் செய்யும் வகையிலும், எளிமையாக தேர்வை அணுகும் வகையிலும் மாதிரி தேர்வு கள் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி 9 முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா போன்று, மாதிரி தேர்வுகள் அடிக்கடி நடத்தப்பட உள்ளன. மாணவர்களிடம் பதில் பெற்று, அதற்கான சரியான விடைகளையும் எடுத்து கூறி, உடனுக்குடன் மதிப்பெண்ணை தெரிவிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது