புத்தக பூங்கொத்து திட்டம் புதுப்பிக்கப்படும்
தமிழகத்தில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மத்தியில், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, கடந்த 2009ல், புத்தக பூங்கொத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின், இத்திட்டம் கைவிடப்பட்டது.
கொரோனா தொற்றுக்கு பின், புத்தக பூங்கொத்து திட்டத்தை, மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வகுப்பறைக்கு ஒரு நுாலகம் என்ற அடிப்படையில், மாணவர்களின் வயதுக்கேற்ற புத்தகங்கள் தேர்வு செய்து, தினசரி வாசிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, குழு அமைத்து, ஆய்வுப்பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நுாலக ஆய்வுக்குழு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் மாணவர்களின் வாசிப்பு திறன் மேம்பட்டுள்ளதால், அதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி வாசிக்க புத்தகங்கள் தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.