துணை மருத்துவ கல்விகளுக்கு விரைவில் விண்ணப்ப பதிவு துவக்கம்
'பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட துணை மருத்துவ கல்விகளுக்கு, விண்ணப்ப பதிவு விரைவில் துவங்கும்' என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 17 துணை நிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கு, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிந்த பின், சேர்க்கை நடைபெறும். விண்ணப்ப பதிவை அதற்கு முன் துவங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. அரசு அனுமதி அளித்தால், விரைவில் விண்ணப் பதிவு துவங்கும். மாணவர்கள் https://tnmedicalselection.net, https://tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்ளை அவ்வப்போது பார்வையிடலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.