பள்ளிகள் திறப்பதால் மாவட்ட வாரியாக இணை இயக்குனர்கள் ஆய்வு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், 19 மாதங்களுக்கு பின், வரும் 1ம் தேதி முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இதற்காக பள்ளி வளாகங்களையும், வகுப்புகளையும் சுத்தம் செய்யும் பணிக்காக, பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளுக்கு தலா, 1,000 ரூபாய் வீதம் 3.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாட்டு பணிகளை கவனிக்கவும், அனைத்து விதமான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் இணை இயக்குனர்கள் மாவட்டந்தோறும் கள ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.