1000 திருக்குறளை 45 நிமிடத்தில் ஒப்பிவித்து அரசு பள்ளி மாணவர் சாதனை
சிவகாசி பவளமலை பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் மோகன் குமார்,45 நிமிடம் 22 விநாடிகளில் ஆயிரம் திருக்குறளை ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார்.தொழில் நகர் அரிமா சங்கத்தினர் சார்பில் சிவகாசி ரிசர்வ் லைன் அரிமா பள்ளி வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், எம்.புதுப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயபிரகாஷ், சகுந்தலா முனியம்மாள் மகன் மோகன் குமார் 10, ஒன்று முதல் 1000 வரையிலான திருக்குறள்களை 45 நிமிடம் 22 விநாடிகளில் ஒப்புவித்து சாதனை புரிந்தார். அரிமா ஒருங்கிணைப்பாளர்கள் சம்பத் குமார், ஆசிரியை ஜெயமேரி, மாணவர் ஒப்புவித்ததை அங்கீகரித்து டிரய்ம்ப் வேர்ல்ட் ரெக்கார்டு சான்றிதழ் அளித்தனர். சங்க முன்னாள் ஆளுநர் சுசீந்தரன், பவளமலை பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை கவுசல்யா தேவி கலந்து கொண்டனர்.