ஊரகத் திறனாய்வுத் தேர்வு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது
கிராமப்புறங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒன்பது முதல் பிளஸ் 2 வரை ஆண்டுக்கு ரூ.1000 உதவித்தொகை
இந்த ஆண்டு 16/12/2023ல் ஊரக திறனாய்வு எழுத்துத்தேர்வு காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு www.dge.tn.gov.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது
மாணவர்களுக்கு அவர்களது பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவரது கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும் தேர்வர்களின் தேர்வு கூட நுழைவுச்சீட்டில் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் இருந்தால் சிவப்பு நிற மையால் பிழையை திருத்த வேண்டும்
அதில் அப்பள்ளி தலைமையாசிரியர் சான்றொப்பம், முத்திரையிட்டு, தேர்வு எழுத அனுமதிக்க கோரி தேர்வு தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது