ஸ்போக் வீல், அலாய் வீல் எது சிறந்தது?
பட்ஜெட் மைலேஜ் பைக்களிலேயே அலாய் வீல் வந்துட்ட நிலையில் சில பைக்குகளில் இன்னும் ஸ்போக்ஸ் வீல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் என்ன? ஸ்போக்ஸ் வீலுக்கும் அலாய் வீலுக்கு உள்ள வித்தியாசம் என்ன?
அலாய் வீல்
அலாய் சக்கரமானது அடர்த்தி குறைந்த அலுமினிய உலோகத்தால் ஆனது. இது கார், பைக் டயருக்கு ஸ்போர்டி லுக் கொடுப்பதோடு, டியூப்லஸ் டயரில் காற்று வெளியேறாமல் இருக்க அதீத அழுத்தம் கொடுக்கும். ஆனால் குண்டும் குழியுமாக உள்ள கரடுமுரடான சாலையில் பணிக்க அலாய் சக்கரம் ஏற்றதல்ல. இதனால் சக்கரம் ஒருபக்கமாக வளைய வாய்ப்புள்ளது. எனவே மலைப்பாதைகளில் பயணம் செய்ய விரும்பும் பிரியர்களுக்கு இது ஏற்றதல்ல. ஃபார்முலா 1 ரேஸ் பைக்குகளில் (ஹயாபூசா, ஜிஎக்ஸ் ஆர், யமஹா ஆர்1) பயன்படுத்தப்படும் அலாய் சக்கரம் கனமானது. இதன் விலை மிக அதிகம். (ஒரு சக்கரம் மட்டும் நாற்பதாயிரம் ரூபாய்)
ஸ்போக் சக்கரம் 1980கள் தொடங்கி, பழங்கால பைக்குகள் அனைத்திலுமே பயன்படுத்தப்படுவது அனைவருக்கும் தெரியும். மெலிதான உலோக ஸ்போக்குகள் ரிம்மில் நுழைக்கப்பட்டிருக்கும். இதில் டியூப்லெஸ் டயரை பொருத்த முடியாது. ஏனெனில் இது காற்றை கட்டுப்படுத்தாது. அதனால்தான் ஸ்போக்ஸ் ரிம்முடன் உள்ள டியூப் டயரில் காற்று போனவுடன் வண்டி தள்ளாடத் துவங்கும். ஆனால் ஸ்போக் வீல் கரடுமுரடான மலை பிரதேசங்கள், சேறு சகதி உள்ள இடங்களில் வண்டிக்கு அதிர்ச்சியை கடத்தாமல் தானே தாங்கிக்கொள்ளும் (வண்டியின் அதிர்ச்சி உறிஞ்சிகள் போல). இதனால்தான் ராயல் என்ஃபீல்டு மட்டும் அலாய் சக்கரத்துக்கு மாறாமல் இருக்கிறது. ஆனால் வண்டி பஞ்சர் ஆகினால் டியூப்லெஸ் டயர் பல நிமிடங்கள் தாங்கும் ஆனால் டியூப் டயர் தாங்காது.