சூரியப் புயல் - ஒரு பார்வை
சூரியனின் துளைகளில் இருந்து வெளிப்படும் சூரிய காற்றின் சக்தியை பொறுத்து தான், அதன் வழியாக உருவாகும் மண்ணியல் புயலின் சக்தி நிர்ணயமாகும். கிளம்பும் மண்ணியல் புயலின் வீச்சு மிகவும் வீரியமானதாக இருந்தால் அது மிகவும் எளிமையாக பூமியை வந்தடையும். தொடர்ச்சியான மற்றும் மிகவும் நீளமான பேராபத்துகள் விளையும்.
ஸ்பேஸ்வெதர்.காம் (SpaceWeather.com) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி அதிவேக மின்னூட்டத்துகள்களின் வெள்ளமானது ஆர்க்டிக் வட்டத்தைச் சுற்றி "மின்காந்த அலைவு" மற்றும் துருவ ஒளிகளை (அரோரா) ஏற்படுத்தவுள்ளது.
அரோராக்கள் எனப்படும் துருவ ஒளிகள் வேண்டுமானால் கண்களுக்கு விருந்தளிக்கும் ஒரு விண்வெளி நிகழ்வாய் இருக்கலாம். ஆனால் மறுகையில் உள்ள மின்காந்த அலைவானது (Geomagnetic storm - மண்ணியல் புயல்) அத்தனை அழகாய் இருக்கப்போவதில்லை.
ஆக சூரியப்புயல் ஏற்படப்போகிறதா.? ஏற்பட்டால் நாம் வாழும் பூமி கிரத்திற்கும் நமக்கும் என்னவாகும்.? சூரியனால் விளையும் மண்ணியல் புயலானது பூமியை வந்தடைய எவ்வளவு நாட்கள் ஆகும்.? அறிவியல் விளக்கத்தின்கீழ், சூரியனின் காந்த மண்டலத்திற்கும் மற்றும் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் உள்ள குளிர்ச்சியான பகுதிகளுக்கும் இடையே ஏற்படும் பரஸ்பர சூழல்களின் விளைவாகவே - சன்ஸ்பாட் (Sunspot) எனப்படும் சூரிய துளைகள் அல்லது ஓட்டைகள் ஏற்படுகின்றன.
வெப்பத்தின் வெள்ளப்பெருக்கு.! சூரிய துளைகள் அல்லது ஓட்டைகள் வழியாக சூரிய காற்று (சூரிய கிளரொளி) வெளியிடப்படுகின்றன. சூரிய காற்று, என்பது உண்மையில் மின்னூட்டத் துகள்கள் மற்றும் வெப்பத்தின் வெள்ளப்பெருக்காகும். பொதுவாக இவ்வகை சூரிய காற்றானது (சூரிய கிளரொளி) சூரியனுள் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் பூமியை வந்தடையும்.
சமீபத்தில் பூமியில் இருந்து கண்டறியப்பட்டுள்ள சூரிய ஓட்டையானது (ஏஆர்2699) சூரியனின் பிரகாசத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு சேர்த்து சூரிய கிளரொளிகளை தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டுள்ளதென்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இது செயற்கைக்கோள்கள், மின் கட்டங்கள் மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்புகள் ஆகியவற்றிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டுருக்கும் ஜியோமெக்னெடிக் ஸ்ட்ரோம் எனப்படும் மண்ணியல் புயல்களை உருவாக்குமா.? என்கிற பீதிகள் கிளம்பியுள்ளன.
ஒரு கடுமையான மண்ணியல் புயலானது, வாரங்கள், மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் கூட தொலைபேசி, வானொலி மற்றும் இணைய அமைப்புகளை தகர்க்கும் வல்லமை கொண்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது
இது தவிர முன்னோடியில்லாத வகையிலான அழிவுகளை கூட இவைகள் தூண்டி விடலாம். இதற்கு முன்னர் பூமியை தாக்கிய மிகப்பெரிய மண்ணியல் புயலானது கடந்த 1859-ஆம் ஆண்டு ஏற்பட்டது. அது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதுமான அப்போதைய தந்தி முறைகளை பாதித்தது.
இதற்கு முன்னர் கடந்த சுமார் 75,000 மைல் அகலத்தில் சூரியனில் ஒரு பெரிய துளை இருப்பதை கண்டுபிடித்ததாக நாசா கூறியது. அந்த துளையானது ஒரு சக்தி வாய்ந்த சூரிய கிளரொளி (Solar flare) உருவாக்க போதுமானதாக உள்ளது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தன. அதன் விளைவாக சூரியப்புயல் (Solar Storm) உருவாக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது கண்டறியப்பட்ட சூரியனின் குறிப்பிட்ட துளையானது பூமியை விட பெரியது மற்றும் பூமியில் இருந்தே காட்சிப்படும் அளவுக்கு பெரியதாகவும் இருந்தது. மேலும் அந்த துளையானது, கதிர்வீச்சு புயல்களை ஏற்படுத்தக்கூடிய சூரிய கிளரொளிகளை உற்பத்தி செய்வதற்கான ஆற்றலையும் கொண்டுருந்தது.
பொதுவாக சூரிய புயல் என்பது சூரிய கிளரொளியில் (Solar Flare) இருந்து ஆரம்பிக்கும். சூரிய கிளரொளி என்பது சூரியனில் ஏற்படும் மிகப்பெரிய வெடிப்பாகும். அந்த வெடிப்பின் தாக்கமானது சூரிய ஆற்றல் மற்றும் துகள்களை விண்வெளியில் சிதற விடும். அந்த சிதறலில் எக்ஸ்-ரே கதிர்கள், மின்னூட்டத் துகள்கள் (charged particles), காந்த பிளாஸ்மா (magnetized plasma) ஆகியவைகளும் அடங்கும்.
சி கிளாஸ் சூரிய கிளரொளி (C Class solar flare) மற்றும் எம் கிளாஸ் (M Class) எனப்படும் இரண்டு வகை சூரிய கிளரொளிகள் பூமிக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால், எக்ஸ் கிளாஸ் (X Class) சூரிய கிளரொளி ஏற்பட்டால், அது 1,000,000,000 ஹைட்ரஜன் குண்டுகள் ஏற்படுத்தும் பாதிப்பை பூமியில் உண்டாக்கும்.
19-ஆம் நூற்றாண்டிற்கு இடையில் ஏற்பட்ட சூரிய புயலுக்கு பின், உலகை இதுநாள்வரை எந்த சூரிய புயலும் தாக்கவில்லை என்கிற போதிலும் விண்வெளி வானிலையை ஆராயும் விஞ்ஞானிகள் சிலர் மீண்டுமொரு சூரிய புயல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவே நம்புகின்றனர். இதுவரை அளக்கப்பட்ட சூரிய கிளரொளிகளிலேயே மிகவும் பலமானது எக்ஸ்-28 என்ற சூரிய கிளரொளி ஆகும். அது கடந்த 2003-ஆம் ஆண்டு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் பலமான சூரிய கிளரொளியின் போது, சூரியனில் இருந்து வெளிப்படும் மின்னூட்டத் துகள்களானது விண்வெளியில் இருக்கும் மனிதர்களின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கும். மறுகையில் உள்ள பூமி கிரக வாசிகள் மீதான தாக்குதல் என்று பார்க்கும் போது - சூரியனில் இருந்து வெளிப்படும் ஆபத்தான மின்னூட்டத் துகள்களானது பூமியை வந்தடைய 12 மணி நேரம் முதல் பல நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்பதால் பாதிப்புகள் சற்று குறைவாகத்தான் இருக்கும்
கற்பனைக்கு எட்டாத பெரிய அளவிலான சூரியப்புயல் தாக்குதல்களானது பூமியின் ஒட்டுமொத்த தொடர்பு சாதனங்களையும் பாதிக்கலாம். அதன் விளைவாக செயற்கைகோள்கள், ஜிபிஎஸ், தொலைபேசிகள், இணையம், விமான பயணம் என அனைத்தும் பாதிக்கப்படும். அப்படி நிகழ்ந்தால் அடிப்படையில் நாம் மீண்டும் இருண்ட காலத்திற்கே (Dark Ages) திரும்பி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
சூரிய புயலின் தாக்கமானது, மிகவும் கொடூரமான பெரிய பேரழிவுகளையோ அல்லது மனிதர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகளோ ஏற்படாது என்றாலும் கூட, பூமி முழுக்க இருக்கும் தொடர்பு கருவிகளையும், தினம் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்ளையும் கடுமையான பாதிப்பிற்குள் தள்ளும். அதிலிருந்து மீள மாத கணக்கில் தொடங்கி ஆண்டுகள் வரை ஆகலாம்.
அத்தோடு நில்லாது நிகழும் சூரியப்புயலானது தண்ணீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அழிப்பு, சேமிக்கப்பட்ட தரவுகளை அழித்தல், கணினி மெமரிகளை அழித்தல் போன்றவைகளையும் நிகழ்த்தும் வல்லமை கொண்டதாக இருக்கும். இவ்வகை பாதிப்பில் இருந்து உலகம் முழுவதுமுள்ள நாடுகள் மீள சுமார் 600 பில்லியன் டாலர்களில் இருந்து 2.6 ட்ரில்லியன் டாலர்கள் வரை செலவாகலாம்.
அளவறியா அண்டத்தில், நாம் வாழும் இப்பெரும் பூமி என்பதே ஒரு குறும்புள்ளி தான் என்கிற போது, அதில் நாம் எம்மாத்திரம்.? நமது பாதுகாப்புகள் எம்மாத்திரம்.? எறும்புகளை போல சூரியன் நம்மை எரித்திக்கொல்ல கூடும் என்பதை நீங்கள் அறிந்திருந்தால் மரணம் மீதான பயம் எப்போதும் உங்களுக்குள் இருக்கும். பூமி மீதான, கிரக வாழ்க்கை மீதான பற்றும், நேசமும் பயத்தின் மூலமாக மிகுதியாம்