பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்துவதில் சிக்கல். ஆய்வக பொருட்கள் இன்றி திணறல்
அரசு பள்ளிகளின் ஆய்வகங்களில், தேவையான பொருட்கள் இல்லாததால், பிளஸ் 2 மாணவர்கள், செய்முறை தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, போராட்டம் நடத்த தலைமை ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் நிர்வாகச் செலவுக்கு, மத்திய அரசின் ஒருங்கிணைந்த, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தில், நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியில், பள்ளிகளின் ஆய்வகங்களுக்கு, ஒரே ஒரு தனியார் நிறுவனம் வாயிலாக, ஆய்வக உபயோகப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.