திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.75 இலட்சம் மாணவர்கள் ஒன்று திரண்டு தமிழ் புத்தகம் வாசித்து உலக சாதனை
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1.75 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும், எழுதியும் உலக சாதனை நிகழ்த்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,177 பள்ளிகள் உள்ளன. அதில் 2.75 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்
அவர்களில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 85 ஆயிரம் மாணவர்கள், 90 ஆயிரம் மாணவிகள் என 1.75 லட்சம் மாணவர்களின் கல்வித் திறனை சோதித்து, தமிழ் படித்தல் திறனை ஆய்வு செய்து உலக சாதனை நிகழ்த்துவதற்கான முயற்சி இன்று நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம், ரோட்டரி கிளப் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கலிபோர்னியாவில் ஒரே நேரத்தில் 75,000 பேர் புத்தகம் வாசித்து படைத்த சாதனை முறியடிக்கப்பட்டது திருவண்ணாமலை மாவட்டத்தில் 470 பள்ளிகளில்தான் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்த இந்நிகழ்ச்சியில், நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலவலர் திரு. ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1.75 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும், எழுதியும் உலக சாதனை நிகழ்த்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,177 பள்ளிகள் உள்ளன. அதில் 2.75 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்
அவர்களில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 85 ஆயிரம் மாணவர்கள், 90 ஆயிரம் மாணவிகள் என 1.75 லட்சம் மாணவர்களின் கல்வித் திறனை சோதித்து, தமிழ் படித்தல் திறனை ஆய்வு செய்து உலக சாதனை நிகழ்த்துவதற்கான முயற்சி இன்று நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம், ரோட்டரி கிளப் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கலிபோர்னியாவில் ஒரே நேரத்தில் 75,000 பேர் புத்தகம் வாசித்து படைத்த சாதனை முறியடிக்கப்பட்டது திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில்தான் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்த இந்நிகழ்ச்சியில், மாவட்டமுழுவதும் 470 மையங்களில் மாணவர்கள் ஒன்று திரண்டு, ஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும், எழுதியும் சாதனை நிகழ்த்தியுள்ளனர். காலை 9.30 மணி முதல் 9.45 மணிவரை வாசிக்கும் நிகழ்ச்சியும், 9.45 மணி முதல் 9.50 மணிவரை எழுதும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த சாதனையை வீடியோவில் பதிவு செய்யப்பட்டதுடன், உலக சாதனையை பதிவு செய்யும் 7 அமைப்புகளும் இதனை நேரில் பார்வையிட்டனர். கடந்த 2003ம் ஆண்டு இதுபோன்ற சாதனை நிகழ்ச்சி கலிபோர்னியாவில் நடைபெற்றதாம். ஆனால் திருவண்ணாமலையில் மாணவர்கள் இன்று நிகழ்த்திய சாதனை அதை முறியடிக்கும் வகையில் அமைந்துவிட்டது. ஒவ்வொருவருக்கும் தங்களது தாய் மொழி வழி கல்விதான் சிறப்பையும் ஆற்றலையும் தரக்கூடியது, அத்துடன், தாய்மொழியில் படிப்பதால்தான் சிந்தனை திறனை, கற்பனை சக்தி அதிகரிக்க வழிஉண்டு என்பதால், தமிழ் வாசித்தல் நிகழ்வை அடிப்படையாக கொண்டு இந்த உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது,