தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு காமராஜர் பிறந்த நாளில் ஊக்கத்தொகை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, காமராஜர் பிறந்த நாளில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக பள் ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கோபியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காமராஜர் பிறந்த நாளில் தமிழ்வழிக் கல்வியில் படிக்கிற மாணவர்களுக்கு மாவட்டத்துக்கு 30 பேர் என தேர்வு செய்யப்படுவார்கள். அதில் உயர் கல்வியில் படிக் கிற மாணவர்கள் 15 பேர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிற மாணவர்கள் 15 பேர் என தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொருவருக் கும் தலா ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என்ற முறையில் ஊக்கத்தொகை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் நியம னம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்ழக்கு முடிந்த பின்னர் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பள்ளிகளுக்குத் தேவையான துப்புரவு பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றார்.