80 ஆயிரம் பேராசிரியர்கள் பித்தலாட்டம்: காட்டி கொடுத்த ஆதார்
ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாக பணியாற்றி வந்த சுமார் 80 ஆயிரம் பேராசிரியர்கள் ஆதார் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து கல்லூரி, பல்கலை. கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி கல்லூரி, பல்கலை. மற்றும் மத்திய பல்கலை. பேராசிரியர்கள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்திருந்தனர்.
ஆதார் அடிப்படையில் இவர்களின் விவரங்களை உயர்கல்வித்துறை அகில இந்திய அளவில் சர்வே செய்து 2016-17- ம் ஆண்டிற்கான அறிக்கையை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது
ஆதார் கட்டாயமாக்கப்பட்டதையடுத்து பல்வேறு கல்லூரிகளில் முறைகோடு செய்து முழு நேர பேராசிரியராக பணியாற்றியுள்ளனர். அப்படி சுமார் 80,000 பேராசிரியர்கள் பணியாற்றி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் மத்திய பல்கலை. பேராசிரியர்கள் யாரும் இல்லை. முறைகேடாக செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். என்றார்.