மத்திய அரசு தகவல் ஆண்டுக்கு 2 முறை நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வு
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வையும், பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வையும் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. சிபிஎஸ்இயின் பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக, இந்த தேர்வுகளை நடத்துவதற்காகவே புதிதாக தேசிய தேர்வு அமைப்பை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதுதொடர்பாக, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உபேந்திரா குஷ்வாகா, ‘ தேசிய தேர்வு அமைப்பு முதற்கட்டமாக சிபிஎஸ்இயால் நடத்தப்படும் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தும். இந்த நுழைவுத்தேர்வுகள், இனி ஆண்டுக்கு இரண்டு முறை ஆன்லைனில் நடத்தப்படும். இதன்மூலம், மாணவர்கள் முதல் தேர்வில் வெற்றி பெறத் தவறினாலும், அடுத்த 6 மாத காலத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பை பெற முடியும்’’ என்று கூறினார்.