முடங்கிய டி.என்.பி.எஸ்.சி., இணைய தளம் : தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு - தேதி நீட்டிக்க எதிர்பார்ப்பு
இணையதளம் முடங்கியதால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் விண்ணப்பதாரர்கள் ஏமாற்றமடைந்தனர்.விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்கிராம நிர்வாக அலுவலர், அலுவலக உதவியாளர், நில அளவர், தட்டச்சர் உள்ளிட்டபணிகளுக்கு 9351 காலி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அறிவித்திருந்தது. அதன்படி அதன் டி.என்.பி.எஸ்.சி.,இணையதளத்தில் நவ.,14 முதல் டிச.,13 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது.
கடைசி நாளில் அதிகரிப்பு : அதன்படி லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இருப்பினும் வழக்கம் போல கடைசி நாட்களில்விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் டிச.,9,10ம் தேதிகளில் இணையதளம் மெதுவாக இயங்கியதால் ஒரு விண்ணப்பத்திற்கே பல மணி நேரம் ஆனது.கடந்த இரண்டு நாட்களாக விடிய,விடிய விழித்திருந்து விண்ணப்பிக்க முயன்றனர். ஆனால் இரவில் 'சர்வர் எர்ரர் 503' என்ற அறிவிப்பே வந்தது. ஆனால் அதிகாலையில் மட்டும்சிறிது நேரம் விண்ணப்பிக்க முடிந்தது.இதனால் ஏராளமானோர் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சர்வர் இயங்காதது குறித்தோ, செயல்படுவது குறித்தோ இணையதளத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்
வாணையம் முன் வராததால் விண்ணப்பதாரர்கள் பலரும் பல மணி நேரம்சிரமத்திற்குள்ளாயினர். நேற்று மாலை வரை தேதி நீட்டிக்கப்படுவது குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.ஒரு தேர்விற்கு இரண்டு விண்ணப்பம் என்பதால் நேரம் அதிகரிப்பதும்
அதனால் சர்வர் இயங்காமல் இருப்பதும் முக்கியமான காரணமாகும்.
ஒரு முறை பதிவை கட்டாயப்படுத்தாமல் விண்ணப்பதாரரின் விருப்பத்தின் பேரில் நடைமுறைப்படுத்த தேர்வாணையம் முன் வர வேண்டும்.