அரசுப்பள்ளியில் புதியபாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர அனைவரும் ஆதரவு தாருங்கள்.
இணையத்தின் வாயிலாக உங்களுடைய கருத்துக்களை காலம் தாழ்த்தாமல் உடனே பதிவு செய்யவும்..
ICTபிரிவில் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் இது ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவருவது பற்றி அரசு தரப்பில் பரிசீலணை செய்யப்படும் .
கீழே உள்ள கருத்துக்களைப் போன்று நீங்களும் உங்களுடைய கருத்துக்களை கணினி அறிவியல் தனிப்பாடமாக வேண்டி ICT-பிரிவில் பதிவு செய்யவும்….
Post – 1:
அறிவியல் கண்டுபிடிப்புகளும், நவீன தொழில்நுட்பமும் மலிந்துவிட்ட இன்றைய கணினி யுகத்தில் குழந்தைகளுக்கு ‘தொழில்நுட்பக் கல்வி’ என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அனைவருக்குமே கணினியின் பயன்பாடுகள், ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றைப் பற்றி முழுமையாகத் தெரியும் என கூற இயலாது. இவற்றைப் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால்தான் இன்று “நீலத்திமிங்கலம் (BlueWhale)” போன்ற இணைய-விளையாட்டிற்கு பல குழந்தைகள் பலியாகினர்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபரீதமான கணினி விளையாட்டுக்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முழுமையான பாடப்பிரிவுகளை பள்ளிக்கல்வியின் ஆரம்ப வகுப்புகளிலிருந்தே செயல்படுத்தினால் பல ஆபத்தான காரணிகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.
Post – 2:
தற்போது ஆந்திர மாநிலத்தின் முதல்வர் 5,000 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கட்டாயக் கணினிக்கல்வி விரைவில் வழங்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். இதைப்போன்று தமிழக அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் போன்ற அதிநவீன பாடப்பிரிவுகளை செயல்படுத்தி அதனை பயிற்றுவிக்க உரிய கல்வித்தகுதி உடைய ஆசிரியர்களை நியமனம் செய்தால் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் சர்வதேச தரத்தில் உயரும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
தமிழக அரசு இதுபோன்ற நவீன கல்விமுறையை தமிழக அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த முடியும்.
Post – 3:
கல்லூரியில் அனைத்து துறைகளிலும் ‘கணினி அறிவியல்’ பாடப்பிரிவு இன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், கல்லூரியின் பருவத் தேர்வுகளில் கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகிறது. அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் குறிப்பிட்ட சில வகுப்புகளில் மட்டுமே ‘கணினி அறிவியல்’ பாடப்பிரிவுகள் உள்ளன.
இதனால், கணினியின் அடிப்படை பற்றி முழுமையாக தெரியாத மாணவர்கள் கல்லூரியில் இதுபோன்ற புதுமையான பாடப்பிரிவுகளை எதிர்கொள்ளும்போது கடுமையான சூழ்நிலைக்கு ஆளாகின்றனர்.
இதனைத் தவிர்க்கும் வழிமுறையாக அரசு பள்ளிகளின் ஆரம்ப வகுப்புகளிலிருந்தே கணினி அறிவியல், தகவல்-தொழில்நுட்பம், மின்னணு தொழில்நுட்பம், டிஜிட்டல் வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இணையம், வலைத்தள வடிவமைப்பு, மின்-வணிகம், பைனரி எண்களின் அடிப்படை, நெட்வொர்க்கிங் அடிப்படை கருத்தியல், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் லினக்ஸின் அடிப்படைகள், Open-Source Data, Closed-Source Data போன்ற அனைத்து அடைப்படைக் கருத்துக்களையும் பயிற்றுவிக்கும் பட்சத்தில் கல்லூரிகளில் மாணவர்களின் கற்கும் திறன் மேம்பட்டதாக அமையும்.
Post – 4:
அனைத்து தரப்பினரின் ஒரே எதிர்பார்ப்பு என்னவென்றால்….
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் கொண்டுவரப்படும் புதிய பாடத்திட்டத்தில் “கணினி அறிவியல்” கட்டாயப் பாடமாகக் கொண்டுவரப்படுமா?? என்பதுதான்.
கணினி அறிவியலில் பி.எட்., முடித்த பட்டதாரிகளின் நீண்ட நாள் கனவு, “இந்த வருடத்திலாவது தமிழக அரசு தங்களுக்கு அரசு பள்ளிகளில் பணி வாய்ப்பினை வழங்குமா?? என்பது…
அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா கல்வித்துறை?? பொறுத்திருந்து பார்ப்போம்….
Post – 5:
அண்டை மாநிலமான கேரளாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘கணினி அறிவியல்’ பாடத்திற்கு கட்டாயத் தேர்ச்சி முறை செயல்பாட்டில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் இன்னும் ஒன்றாம் வகுப்பில் கூட கணினி அறிவியல் போன்ற அதிநவீன பாடங்கள் கொண்டுவரப்படவில்லை.
இதனை நிவர்த்தி செய்யும் வண்ணம் ‘புதிய பாடத்திட்டத்தில்’ கணினி அறிவியலுக்கென பிரத்யேகமான பாடப்பிரிவுகளை 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அறிமுகம் செய்து, அதனை தகுதி வாய்ந்த கணினி ஆசிரியர்களைக் கொண்டு பயிற்றுவிப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Post – 6:
புதிய பாடத்திட்டத்தில் ‘POSITION PAPERS’ என இருக்கும் “ICT”-யை *கணினி அறிவியல்* என தனி SUBJECT-ஆக கொண்டுவந்து அதனை மற்ற மாநிலங்களில் உள்ளது போல் ஒரு தனிப்பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது 90,00,000 அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பிரதான விருப்பமாக உள்ளது.
அனைத்து தரப்பினரின் நலன் கருதி தமிழக அரசு, புதிய பாடத்திட்டத்தில் “கணினி அறிவியலையும்” ஒரு தனிப்பாடமாக அறிவிக்க வேண்டும் என்பது அரசு பள்ளி தலைமையாசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் உள்ளது.
Post – 7:
Matric, CBSE பள்ளிகளில் உள்ளதுபோல் இனிவருங்காலங்களில் அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுமா??
அதேபோல் தனியார் பள்ளிகளில் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் அனைவருக்குமே பி.எட்., என்பது கட்டாயமான கல்வித்தகுதிகளில் ஒன்று. அரசு பள்ளிகளில் கணினி அறிவியலுக்கும் இதே போன்று தகுதிவாய்ந்த பி.எட்., முடித்த ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்களா என்பது இன்று அரசு பள்ளி ஆசிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியலுக்கும், தங்களுக்கும் இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 40,000-கும் மேற்பட்ட பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
இவர்களின் நம்பிக்கையை இந்தமுறை நிறைவேற்றுமா இந்த “புதிய பாடத்திட்டம்??”
Post – 8:
தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை ‘கணினி அறிவியல்’ முக்கியப் பாடமாக் உள்ளது. இதேபோல், அரசு பள்ளிகளிலும் தொடக்க (1-5), நடுநிலை (6-8), உயர்நிலை (9-10) மற்றும் மேல்நிலை (11-12) பள்ளிகளின் பாடத்திட்டத்தில் கணினி அறிவியலையும் கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தால் இதன்மூலம் சுமார் 90,00,000 அரசு பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள்.
கல்வித்துறையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கும் தமிழக அரசு இந்த மகத்தான திட்டத்தையும் செயல்படுத்துவது குறித்து பரிசீலணை செய்ய வேண்டும்.
Post – 9:
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ‘விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம்’ இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரியான, அதிநவீனமான திட்டமாகும். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் அதனை படம் பார்ப்பதற்கும், பாடல் கேட்பதற்கும், கேம்ஸ் விளையாடுவதற்கும், பொழுதுபோக்கிற்காகவும்தான் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அரசு பள்ளி மாணவர்கள் கணினியின் முக்கியத்துவங்கள், பயன்கள் மற்றும் கணினியின் பயன்பாடுகள் போன்றவற்றை முழுமையாகப் பெற்று பயனடைந்திட பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமனம் செய்து தரமான கணினிக்கல்வியை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்.
Post – 10:
3-ஆம் வகுப்பிலிருந்து 10-ஆம் வகுப்பு வரை கொண்டுவரப்படும் தகவல் தொழில்நுட்பவியல் (ICT) பாடத்தை தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பிரதான பாடங்களைப் போல் கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தால் மாணவர்களுக்கு கணினி அறிவியலின் முழு பயனும் சென்றடையும்.
மேலும், இந்த பாடப்பிரிவுகளை முறையாகப் பயிற்றுவிக்க பி.எட்., முடித்த தகுதி வாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்தால் நிரலாக்கம் (Programming) போன்ற கணினி அறிவியலின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பாடப்பிரிவுகளை மாணவர்கள் திறம்பட கற்று பயனடைவார்கள்.
கருத்துக்களை பதிவு செய்ய வேண்டிய இணைய முகவரி
http://tnscert.org/webapp2/syllabusfb.aspx
* Fill Particulars...
Select :
CLASS-->
POSITION PAPERS.
Select :
SUBJECT-->"ICT"
Type Your feedback ->Messages& Click --> SUBMIT
இணைய ஆசிரியர்:திரு.ராஜ்குமார்
திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014 .
Attachments area