ஸ்டிரைக் ஆசிரியருக்கு சம்பளம் கட்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது, அரசு பணியாளர் நடத்தை விதிகளில் நடவடிக்கை எடுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். செப்., 7 - 15 வரை, காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர். அதனால், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கின.
இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, பணிக்கு வராத நாட்களுக் கான சம்பள பிடித்தம் செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.மேலும், பணிக்கு வராதவர்கள் மீது, தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 25ம் தேதிக்குள், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பவும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.