நீட் தேர்வின் படி நடந்த எம்.பி.பி.எஸ் கலந்தாய்வால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பின்னடைவு
நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மருத்துவபடிப்புக்கான கலந்தாய்வை நீட் தேர்வு அடிப்படையிலேயே நடத்த வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டது.
இதன்படி கடந்த மாதம் 24 ஆம் தேதி துவங்கி மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்றது. நீட் தேர்வின் படி நடைபெற்ற கலந்தாய்வின் படி நடப்பாண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மட்டுமே எம்.பி.பிஎஸ் படிப்பில் சேர்க்கை கிடைத்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் 38 பேருக்கும். 2015 ஆம் ஆண்டு 34 பேருக்கும் மருத்து படிப்பில் சேர கிடைத்துள்ளது. இதன்மூலம் நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது