பணமதிப்பு நீக்கத்தினால் வெளிவந்த கறுப்பு பணம் எவ்வளவு? ரிசர்வ் வங்கி பதில்
பணமதிப்பு நீக்கத்தினால் வெளிவந்த கறுப்பு பணம் எவ்வளவு? ரிசர்வ் வங்கி பதில்
வங்கிகளுக்கு வந்து சேர்ந்த ரூ 15.28 லட்சம் கோடியில் எவ்வளவு ரூபாய் கறுப்புப் பணம் என்பது இப்போதைக்கு சொல்ல இயலாது என்று சொல்லிய ரிசர்வ் வங்கி அதனை சரிபார்த்தல் பணிகள் நிறைவேறிய பின்னரே சொல்ல முடியும் என்றும் சொல்லியுள்ளது. இந்த ரூ.15.28 லட்சம் கோடி ரூபாயை த்தான் நாடாளுமன்றக்குழுவின் முன் வைக்கப்போவதாகும் அது கூறியுள்ளது.
பெரிய அளவில் பணம் வந்துள்ளதால் இதை எண்ணி முடிக்க கால அவகாசம் தேவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. அதே போல எவ்வளவு கறுப்புப் பணம் வெள்ளையாக மாறியது என்பது பற்றியும் தகவல் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016-17 ஆம் ஆண்டில் பொருளாதார தேக்கம் பண மதிப்பு நீக்கம் ஏற்பட்டதற்கு வெகுமுன்னரே நிகழ்ந்துவிட்டது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இருப்பினும் அறிக்கையை இன்னும் நாடாளுமன்றக் குழு வெளியிடவில்லை. இதனிடையே ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் பணமதிப்புநீக்க நடவடிக்கைக்கு பிறகு 1 சதவீத செல்லாத நோட்டுக்களே திரும்ப வரவில்லை என்று கூறியது.