ப்ளூவேல்’ வீடியோ கேமின் தீமை குறித்து, மாணவ, மாணவியருக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு - பள்ளிக் கல்வி இயக்குநர்
‘ப்ளூவேல்’ வீடியோ கேமின் தீமை குறித்து, மாணவ, மாணவியருக்கு எடுத்துக்கூறி, வழிமாறி சென்றுவிடாமல் இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,’ என்று, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை இயக்குனர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பிய, அவசர சுற்றறிக்கை:
கம்ப்யூட்டர், மொபைல் போன் மூலம் இணையதளங்களில் தேவையற்ற விளையாட்டுகள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று,
மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், இறை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அறிவுரை வழங்க வேண்டும். இணையதளங்களில் தொடர்ந்து விளையாடுவதால் ஏற்படும் உடல், மனரீதியான பாதிப்பு குறித்து, மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
புத்தகம் வாசித்தல், உடற்பயிற்சி, யோகா மற்றும் விளையாட்டு திடலுக்கு சென்று விளையாடுவதில் மாணவர்கள் ஆர்வம் செலுத்த, ஊக்குவிக்க வேண்டும்.
குழந்தைகளுடன் இருப்பதற்கு அதிக நேரம் ஒதுக்கி அவர்களை தனிமையில் இருக்கிறோம் என்ற உணர்வுக்கு இடம் தராமல், பெற்றோர் கலந்துரையாட, அறிவுரை வழங்க வேண்டும்.
இணையதளத்தை சரியா பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்கும் ‘சாப்ட்வேரை’ கம்ப்யூட்டரில் பொருத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பப்பட்டு, மாணவர்களை கவனிக்குமாறு, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.