ஓட்டுனர்கள் அசல் லைசென்ஸ் வைத்திருப்பது நாளை மறுநாள் முதல் (6-09-2017) கட்டாயம்:
ஐகோர்ட்வரும் 6 ம் தேதி முதல் வாகன ஓட்டுனர்கள் அசல் லைசென்ஸ் வைத்திருப்பது கட்டாயம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அசல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் மற்றும் டிராபிக்ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் கீழ்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
வாகன ஓட்டுனர்கள் வரும் 6ம் தேதி முதல் கட்டாயம் அசல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். அசல் லைசென்ஸ் பத்திரமாக வைத்திருப்பது நமது கடமை ஆகும். மழை மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பதும் நமது கடமை. அசல் லைசென்ஸ் வைத்திருக்காதவர்களுக்கு ரூ. 500 அபராதமும், அல்லது 3 மாத சிறைத்தண்டனையும் விதிக்கலாம். அசல் லைசென்ஸ் வைத்திருந்தால்தான் விதிமீறலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.