புதிதாக பொறுப்பேற்ற 9 மத்திய இணை அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவரம்
மத்திய அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரவை இன்று மூன்றாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. இணை அமைச்சர்களாக இருந்த பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்பட 4 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்
அஸ்வின் குமார் செளபே, சத்யபால் சிங், ஷிவ் பிரதாப் சுக்லா, ராஜ்குமார் சிங், வீரேந்திர குமார், ஹர்தீப் சிங் புரி, கஜேந்திர சிங் ஷெகவாத், அனந்தகுமார், அல்போன்ஸ் ஆகிய 9 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு) துறைகள்: ராஜ்குமார் சிங்- மின்துறை (தனிபொறுப்பு), புதுப்பிக்கத்தக்க எரிவாயு துறை அல்போன்ஸ் - சுற்றுலா துறை (தனிபொறுப்பு), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஹர்தீப் சிங் புரி- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (தனிபொறுப்பு) இணை அமைச்சர்களின் துறைகள்: அனந்தகுமார்- திறன் மேம்பாடு மற்றும் தொழில் துறை சத்யபால் சிங்- மனிதவளம், நீர் பாசனம், தூய்மை கங்கை திட்டம் கஜேந்திர சிங்- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் ஷிவ் பிரதாப் சிங்- நிதி துறை அஸ்வின் குமார் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் துறை வீரேந்திர குமார் - பெண்கள் மற்றும் குழந்தை நலன் மேம்பாடு மற்றும் சிறுபான்மை துறை