தமிழகத்துக்கு நிரந்தர கவர்னர் நியமனம்?மத்திய அமைச்சரவை நாளை மாற்றியமைப்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படு கிறது. நாளை காலை, ஜனாதிபதி மாளிகை யில் நடக்கும் நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்கள்
பதவியேற்க உள்ளனர். இதில், தற்போதைய இணையமைச்சர்களில் சிலர், கேபினட் அமைச் சர்களாகவும், புதியவர்கள் பலர், இணையமைச் சர்களாகவும் நியமிக்கப்படலாம், என எதிர்பார்க் கப்படுகிறது.
மத்தியில் ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2014, மே மாதம், பொறுப்பேற்றது. அதே ஆண்டு நவம்பரில், முதல் முறையாக மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது. பின், 2016, ஜூலையில், இரண்டாம் முறை, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், மத்திய அமைச்சர வையை மீண்டும் மாற்றியமைக்க, பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். இதன்படி, பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய அமைச்சர் கள் சிலர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இதையடுத்து, நாளை காலை, 10:00 மணிக்கு, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்கள் பதவியேற்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. புதிதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்களுக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து உள்ள, பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரின், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, எம்.பி.,க்க ளில் சிலர், மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ள தாக தெரிகிறது. சமீபத்தில் நடந்த ரயில் விபத்து களுக்கு பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு, தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். எனினும், பிரதமர் மோடி, அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த, ஆர்.சி.பி.சின்ஹாவுக்கு, ரயில்வே அமைச் சகத்தை ஒதுக்கும்படி, மத்திய அரசிடம், நிதிஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கட்சியை சேர்ந்த மேலும் சிலருக்கு, கேபினட் அல்லது இணைஅமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக எம்.பி.,க்கள்?
பார்லிமென்ட்டில், 50 எம்.பி.,க்களுடன், பலம் வாய்ந்த கட்சியாக திகழும், அ.தி.மு.க.,வை, மத்திய அமைச்சரவையில் சேர்க்க, பா.ஜ., மேலிடம் ஆர்வ மாக உள்ளதாகவும், இது குறித்து, அந்தக் கட்சி நிர்வாகிகளே முடிவெடுக்க வேண்டும் எனவும், பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அ.தி.மு.க., வில் தற்போது நிலவும், உட்கட்சி பூசல், தமிழக அரசின் ஸ்திரத்தன்மையற்ற நிலை உள்ளிட்ட காரணங்களால், மத்திய அமைச்சரவையில், அ.தி.மு.க., இடம் பெறாது என்றே கூறப்படுகிறது.
மஹாராஷ்டிராவுக்கு...
மஹாராஷ்டிரா மாநில கவர்னர், வித்யாசாகர் ராவ், தமிழக கவர்னர் பொறுப்பையும், கூடுதலாக கவனித்து வருகிறார். தமிழகத்தில் தற்போது நில வும் அரசியல் சூழ்நிலைகளைகவனிக்கும் வகை யில், இங்கு நிரந்தர கவர்னர் நியமிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.
தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள வர்களில் ஒருவரை, மஹாராஷ்டிரா மாநில கவர்னராக நியமித்து, தமிழக பொறுப்பு கவர்னராக செயல்படும் வித்யாசாகர் ராவை, நிரந் தர கவர்னராக நியமிக்க மத்திய அரசு திட்ட மிட்டு உள்ளதாக தெரிகிறது.தற்போது, இணை யமைச்சர்களாக உள்ள சிலரின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி, அவர்களுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படலாம் எனவும், பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், மத்திய மின்துறை இணைய மைச் சர்கள், பியுஷ் கோயல், பெட்ரோலிய துறை இணைஅமைச்சர், தர்மேந்திர பிரதான், தொலைத்தொடர்பு துறை இணையமைச்சர், மனோஜ் சின்ஹா, வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சித்துறை இணையமைச்சர், ஜிதேந்திரா சிங் மற்றும் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியான, வர்த்தக துறை இணைய மைச்சர், நிர்மலா சீதாராமன் ஆகியோர், கேபினட் அந்தஸ்த்துக்கு உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள நிதின் கட்கரியிடம், ரயில்வே துறை ஒப்படைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருப்பதால், மத்திய சுகாதார அமைச்சர், ஜே.பி., நட்டாவை, பா.ஜ., சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.
அவர் வகித்து வரும் துறை, வேறு அமைச்ச ரிடமோ, புதியவர் ஒருவரிடமோ ஒப்படைக்கப் படலாம் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.