மத்திய அரசின் உதவித்தொகை பெற அக்டோபர் 30க்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய மனிதவள அமைச்சகத்தால் வழங்கப்படும், ‘சென்டரல் செக்டார் ஸ்கீம் ஆப் ஸ்காலர்ஷிப்’ (சி.எஸ்.எஸ்.எஸ்.,) உதவித்தொகைக்கு மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருத்தல் வேண்டும்.
தகுதிகள்: மார்ச் 2017ல் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, 2017-18 கல்வியாண்டில், உயர் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 4.5 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை: இளநிலை பட்டப்படிப்புக்கு மாதம் ரூபாய் ஆயிரம், முதுநிலை பட்டப்படிப்புக்கு மாதம் ரூபாய் இரண்டு ஆயிரம். விண்ப்பிப்பதற்கு ஆதார் எண் / பான் கார்டு /வாக்காளர் அடையாள அட்டை/ டிரைவிங் லைசன்ஸ் ஏதேனும் ஒன்றினை
வைத்திருக்கவேண்டும். வருமான உச்ச வரம்பு 4,5 இலட்சத்துக்க மிகாமல் இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 30 www.scholarships.gov.in என்ற இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் விபரங்களுக்கு: http://mhrd.gov.in/scholarships