பள்ளிகளில் கணினி, மொபைல் போனுக்கு தடை
இணையதளத்தில், ’ப்ளூ வேல்’ என்ற அபாயகரமான விளையாட்டு, மாணவர்களை மரண குழியில் தள்ளி வருகிறது.
மும்பை, கேரளா போன்ற மாநிலங்களில் மட்டும் பரவிய இந்த விளையாட்டு, தமிழகத்தில் புகுந்துள்ளது. மதுரை யில் இந்த விளையாட்டுக்கு, ஒரு மாணவர் பலியாகியுள்ளார்.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
’மொபைல் போன், ஐ பேட், நோட் பேட், லேப்டாப்’ போன்ற எந்தவித மின்னணு பொருளையும், பள்ளிக்கு எடுத்து வரக்கூடாது. பள்ளி வாகனங்களிலும் எடுத்து வரக்கூடாது.
இணையதளம் இயக்குதல், கம்ப்யூட்டர் மற்றும் டிஜிட்டல் தகவல்களை பரிமாறும் மற்றும் கையாளும் எந்த பொருளுக்கும், பள்ளிகளில் அனுமதி கிடையாது.
பள்ளிகளில் இணையதளம் மற்றும் கணினி பயன்படுத்துவதாக இருந்தால், அவற்றை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கண்காணிக்கும் வகையில், பரந்துபட்ட இடத்தை ஒதுக்க வேண்டும்.
இணையதள பாதுகாப்பை, அனைத்து பள்ளி களும் மேற்கொள்ள வேண்டும். அனுமதிக்கப்படாத இணைய தளங்களை இயக்க, மாணவர்களுக்கு அனுமதி தரக்கூடாது. இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்று, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளும், தங்கள் மாணவர்கள் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்த, தடை விதித்துள்ளன.